2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியாவின் கல்விப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவின் கல்விப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வு முன்மொழிவுகளும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கிண்ணியா மத்திய கல்லூரியில் முஸ்லிம் மாணவ பேரவையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

முஸ்லிம் மாணவ பேரவையின் தலைவர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்விப்பணி, சமூகப்பணி மற்றும் பொதுப்பணிகளில் பங்காற்றிய ஐவர் பாராட்டப்பட்டனர்.

இதில் ஆசிரிய ஆலோசகர் கலாநிதி கே.எம்.இக்பால், சவூதி தூதுவராலய உதவிக் கணக்காளர் எஸ்.ஏ.அஸீஸ், அதிபர் எம்.எஸ்.நசூர்தீன், உலமா சபை தலைவர் எ.ஆர்.நஸார், கொந்தரத்துகாரர் எம்.எம்.முஸ்தபா ஆகியோர் பாரட்டப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வி உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .