Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கந்தளாய் - திருகோணமலை பிரதான பாதை மிக மோசமாக சேதமடைந்து குழிகளாகக் காணப்படுவதால் தற்போதைய மழை காலத்தில் வாகனங்களும், பொதுமகளும் இவ்வீதியின் ஊடாக பயணிப்பதில் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கற்போது நாட்டின் முக்கிய பிரதான பாதைகள் அகலமாக்கப்பட்டு, காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளையில், கிழக்கின் தலைநகரம் எனக் கூறப்படும் திருகோணமலைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து பயணிப்பதற்கான மிகப் பிரதான வழியாகக் கருதப்படும் இப்பாதை - இவ்வாறு கவனிக்கப்படாமல் கிடப்பது விசனத்துக்குரியது என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
சுமார் 45 கிலோமீற்றர் தூரமுள்ள இப்பாதையானது கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் உள்ளிட்ட பிரதேசங்களினூடக சென்று திருகோணமலையினை அடைகின்றது.
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலர் இப்பாதையினூடாகவே மாகாணசபை அமர்வுகளுக்குச் செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago