2025 மே 15, வியாழக்கிழமை

அடிப்படை வசதியற்ற நிலையில் மூதூர் பிரதேச தாழ்நிலப் பகுதி மக்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மூதூர் பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதி வாழ் மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளற்ற நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 இற்கும் அதிகமான கிராமங்களிலுள்ள தாழ் நிலப்பகுதிகளில் மக்களே மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மழை வெள்ளத்தால் தமது குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், தமது தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு தினத்தில் கூட தமது அடுப்புக்கள் எரிக்கப்படாத அவலநிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த இம்மக்கள்,  தமது இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தம்பட்ட அரசாங்க அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ கவனத்திற் கொள்ளாதது தமக்கு கவலையளிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .