2025 மே 15, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

புல்மோட்டை மகாவித்தியாலயத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு 1000 அப்பியாச கொப்பிகளை கிழக்கு மாகாணசபை  உறுப்பினரும் மாகாணசபை பிரதி தவிசாளருமான ஆரியவதி கலபதி இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.


இதனையடுத்து, அவர் பதவிசிறிபுர பகுதிக்கு விஜயம் செய்து அங்கு 750 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கினார்.  
திருகோணமலை,  அன்புவளிபுரம், ஜமாலியா, தம்பலகாமம், கந்தளாய் மொரவேவ, ஹோமரன்கடவெல பகுதிகளிலுள்ள பாலர் பாடசாலைகளில் கற்கும் 4000 பிள்ளைகளுக்கு பாடசாலை பைகளையும் தண்ணீர் போத்தல்களையும் அவர் ஏற்கனவே புதுவருட அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .