2025 மே 15, வியாழக்கிழமை

கடலில் படகு கவிழ்ந்தது: ஒருவரை காணவில்லை

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா காக்காமுனை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை விறகு சேகரிப்பதற்காக படகொன்றில்  சென்ற நபரொருவர் படகு கவிழ்ந்ததினால் காணாமல் போயுள்ளார்.

இப்படகில் சென்ற ஏனைய மூன்று பேரும் நீந்தி கரை திரும்பியுள்ளனர்.

கிண்ணியாவைச் சேர்ந்த 23 வயதான ஏ. மிஸ்ருல் என்பவரே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். படகின் துடுப்பு, சேற்றினுள் புதைந்ததையடுத்து அதை எடுக்க முற்பட்ட போதே படகு கவிழ்ந்துள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கடல் கொந்தளிப்பினால் தேடுதல் பணிகள் சிரமமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .