Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 12 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில், எஸ்.எஸ்.சசிகுமார், எம்.பரீட்)
திருகோணமலையில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. இருப்பினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வேறு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 18,122 குடும்பங்களைச் சேர்ந்த 67,283 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் தனியார் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் குட்டிக்கராச்சி. குறிஞ்சாக்கேணி பாலத்தின் மேலால் அளவுக்கு அதிகமான நீர் பாய்கின்றது. இதன் காரணமாக இப்பகுதி ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் குட்டிக்கராச்சி, குறிஞ்சாக்கேணி, ஆலங்கேணி, பைசல்நகர், வானாறு. சூரன்கல், காக்காமுனை ஆகிய பாலங்களின் மேலாக பெருமளவான நீர் பாய்கின்றது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாகவும், குளத்து நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும் பெருமளவான விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35,568 ஹெக்டெயார் ஏக்கர் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் அரியமான்கேணி அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக அரியமான்கேணி, நிலாப்பொல, கங்குவேலி மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், திருகோணமலைக்கு இன்று அனர்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இம்மாவட்டத்தில் பல இடங்களுக்கு விஜயம்செய்து பாதிக்கப்பட்ட இடங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago