2025 மே 15, வியாழக்கிழமை

மலேசிய மலாக்கா பிராந்திய முதலமைச்சர் திருமலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மலேசியா மலாக்கா பிராந்திய முதல் அமைச்சர் அலி குஸ்தான் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அலி குஸ்தானுக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.


அலி குஸ்தானை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம அவரது வாசஸ்தலத்தில் வைத்து நேற்று மாலை சந்தித்தார்.


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலைமை பற்றி ஆளுநருடன் அவர் கலந்துரையாடினார்.  சேதவிபரங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதும் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவி புரிவதும் இவரது விஜயத்தின் நோக்கமாகும்.


பின்னர் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து அங்கு ஏற்பட்ட நிலைமைகள் பற்றி பிரதேச செயலாளர் எம்.முபாறக் உடனும் பிரதேச அதிகாரிகளுடனும் அலி குஸ்தான் கலந்துரையாடினார். பாதிக்கப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .