2025 மே 15, வியாழக்கிழமை

குச்சவெளியில் நில வெடிப்பு, புதைகுழிகள் ஏற்பட்டு அதிசயம்;பொதுமக்கள் அச்சத்தில்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நில வெடிப்பு ஏற்பட்டு இடத்துக்கிடம் மண் குவிந்து வருவதுடன் சில இடங்களில் புதைகுழிகளும் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இந்த அதிசய நிகழ்வு இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

சுமார் 400 மீற்றர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் இடம்பெற்றுவரும் இந்த அதிசய நிகழ்வினை அடுத்து அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருமலைக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Video: Abudl Salam Yaseem


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .