2025 மே 15, வியாழக்கிழமை

நூற்றாண்டு வீதியோட்டம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 28 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இராமகிருஷ்ண சங்கம் 1993ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதி தேசிய பாடசாலையாக கல்வி அமைச்சால் தரம் உயர்த்தப்பட்டது. 1997 கல்லூரி நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இதன் ஓர் அம்சமாக விளையாட்டு பிரிவினரால் மாணவர்கள் மத்தியில் வீதி ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருடாந்தம் இத்தினத்தைக் குறிக்கும் முகமாக வீதி ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. கனிஷ்ட பிரிவு, இடைநிலை பிரிவு, சிரேஷ்ட பிரிவு என்று மூன்று போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இவ்வருடத்துக்கான போட்டி நாளை சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இப்போட்டியில் 800 மாணவர்கள் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .