2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் அடை மழை

Super User   / 2011 ஜனவரி 31 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தம்பலகாமம்  பத்தினிபுரத்திலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 19 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் பத்தினிபுரம் முன்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வெருகல் பிரதேசம் செயலாளர் பிரிவும் வெள்ளத்தால் பாதிக்ப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தை சேர்ந்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.

குச்சவெளி பிரதே செயலாளர் பிரிவில் வாழையூற்று என்னும் இடத்தில் 69 குடும்;பங்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.

நீர்வரத்து அதிகமானதன் காரணத்தால் கந்தளாய் குளத்தின் 9 கதவுகள் திறக்கப்பட்டு ஒன்றரை அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் திருகோணமலை கண்டி வீதியின் 96ஆவது மைல் கல் என்னும் இடத்தில் வீதியின் மேலாக நீர் பாய்ந்து செல்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .