2025 மே 15, வியாழக்கிழமை

இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் துஆப் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

தொடரும் வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிலிருந்து மக்கள் பாதுகாப்பு பெறும் வகையில் இறைவனை வேண்டி மாபெரும் துஆப் பிரார்த்தனையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மூதூர் அக்கரைச்சேனை முகைதீன் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அக்கரைச்சேனை முகைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் மூதூர் ஜன்னாஹ் சமூக அபிவிருத்தி மையம் இணைந்து நடத்திய இப்பிரார்த்தனையில், மூதூரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனையில் கலந்து கொண்டோர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரியதுடன,; மூதூர் பிரதேசத்திலும் நாட்டிலும் உலகெங்கும் வாழும் மனிதர்கள் அனைவரையும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு மனம் உருகி கண்ணீர் மல்க இறைவனை வேண்டினர்.

றவுலதுல் ஜன்னா அரபுக் கல்லூரியின் சிரேஷ;ட விரிவுரையாளர் மௌலவி எம்.எம்.முனாஸ் (றசாதி) பிரார்த்தனையை தலைமை தாங்கி நடத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .