2025 மே 14, புதன்கிழமை

மூதூரில் வெள்ள இடம்பெயர் மக்களுக்கான வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பொதுவிடங்களில் தங்கியுள்ள மக்களுக்கான வைத்திய முகாம்களை  சுகாதார திணைக்களம் நடத்தி வருகிறது.

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும்  அல்ஹிதாயா மகாவித்தியாலத்திலும் வைத்திய முகாம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோது பல நூற்றுக்கணக்கானோர் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொண்டனர்.

திருகோணமலையிலிருந்து வருகை தந்த வைத்தியர்களோடு மூதூர் தளவைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றை சேர்ந்த வைத்தியர்களும் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .