Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை பிரதான தபால் நிலையத்திலிருந்து வெளியிடங்குளுக்கு தபால் பொதிகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தபால் அத்தியட்சகர் ரூப சுந்தர பண்டா தெரிவித்துள்ளார்.
திருமலை - வவுனியா வீதி சேதம் ஏற்பட்டுள்ளதால் மொறவௌ, றொட்டவௌ, மகதிவுல்வௌ, வவுனியா போன்ற பகுதிகளுக்கான தபால் பொதிகள் மற்றும் திருமலை - புல்மோட்டை வீதி சேதமடைந்துள்ளதால் புல்மோட்டை, தென்னைமரவாடி போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற தபால் பொதிகளும் அனுப்பப்படாமல் தேங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 03ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தபால் பொதிகள் திருகோணமலைக்கு வந்து சேரவில்லையெனவும் குறிப்பிட்டார்.
அனுப்பப்படாத தபால் பொதிகளை துரிதகதியில் விநியோகிக்க உள்ளதாகவும் தபால் அத்தியட்சகர் ரூப சுந்தர பண்டா மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago