2025 மே 14, புதன்கிழமை

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவது தொடர்பாக கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்து, இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று மூதூரில் நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் என்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நிறுவனத் தலைவர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமரச் செய்யும் வகையில் அவர்களது அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .