2025 மே 14, புதன்கிழமை

இலிங்கநகர் கோணலிங்க வித்தியாலயத்தின் ஆண்டு விழா

Kogilavani   / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இலிங்கநகர் கோணலிங்க வித்தியாலயத்தின் 34 ஆம் ஆண்டு விழா நேற்று பாடசலையில் இடம்பெற்றது.

இப்பாடசாலை 31.01.1977 ஆம் ஆண்டு இலிங்கநகர் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 31 ஆம் திகதி ஆண்டு விழாவினை அனுஷ்டிக்க இருந்த போதிலும் மழை காரணமாக இந்நிகழ்வு பிற்போடப்பட்டது.

பாடசாலை அதிபர் க.ஜெகநாதன் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களின் திறமைகைள  வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான மென்பந்து 2  கிரிக்ககெட் சுற்றுப் போட்டி நடத்தப்பட்டது.

முதலாவது போட்டியில் ஆசிரியைகளை எதிர்கொண்டு மாணவிகளும்,   இரண்டாவது போட்டியில் மாணவர்களை எதிர்கொணடு ஆசிரியர்களும் களம் இறங்கினார்கள்  இப்போட்டிகளில் மாணவிகள் அணியும், மாணவர்கள் அணியும் வெற்றி பெற்றன.

மேலும் மாணவர்கள் மத்தியில் சிறு விளையாட்டுகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .