2025 மே 15, வியாழக்கிழமை

ரயிலில் மோதி இளம்பெண் தற்கொலை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த ரயிலின் முன்னால் குதித்து - சீனக்குடாவை சேர்ந்த யுவதி ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை கிணற்றடியில் உடைகள் கழுவிக்கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு வந்து பேசிக்கொண்டிருந்த தனது மகள், ரயில் வந்தவுடன் பாய்ந்ததாக தற்கொலை செய்தவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் தற்சமயம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த தற்கொலை சம்மந்தமாக சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .