Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப்பிரிவுக்குட்பட்ட குரங்குபாஞ்சான் பரகத்நகர் முஸ்லிம் வித்தியாலயத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ் யுனிசெப் நிறுவனம் 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு கரங்குபாஞ்சான் பிரதேசம் முழுமையாக அழிக்கப்பட்டதனால் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கிண்ணியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு இப்பாடசாலை கிண்ணியா அல் அதான் வித்தியாலயத்தில் தற்காலிகமாக ஒரு பகுதியில் கடந்த இருபது வருடங்களாக இயங்கி வருகின்றது.
தற்போது யுத்தம் முடிவுற்று அமைதிச் சூழல் நிழவுவதால் அப் பிரதேச மக்கள் படிப்படியாக அங்கு மீள்குடியேறி; வருகின்றனர். இதனால் இப்பாடசாலையையும் அங்கு நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குரங்குபாஞ்சான் பிரதேசத்தில பாடசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்த இடத்தினை பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இனங்கண்டு அப் பிரதேசத்தை தற்போது சிரமதானம் மூலம் துப்பரவு செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .