2025 மே 14, புதன்கிழமை

திருமலை கடற்கரையோர அளவுகளில் மாறுபாடு; எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் கடற்கரையோரத்தில்  குடியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனொரு  அங்கமாக கரையோரப் பகுதிகள் யாவும் அளந்து அடையாளமிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சில இடங்களில் 60 மீற்றர்களும் சில இடங்களில் 80 மீற்றர்களும் என மாறுபட்ட அளவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனைக் கண்டிக்கும் முகமாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜயந்த விஜயசேகர தலைமையில் கிழக்கு சிங்கள அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது. திருகோணமலை நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்றலில் இன்று வியாழக்கிழமை  முற்பகல் 10 மணிக்கு இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .