2025 மே 14, புதன்கிழமை

வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக கருத்தரங்கு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற 10 இலட்சம் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் பற்றிய பிரதேச மட்ட பயிற்சி நெறியொன்று இன்று சனிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் என்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கிராம உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது சுகாதார குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் என 130 பேர் வரை கலந்துகொண்டனர்.

இதில் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அபிவிருத்தியில் தென்னைச் செய்கை, நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில், முதலான விடயங்களில் துறைசார் வளவாளர்களினால் செய்முறை விளக்கம் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .