2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலையில் திவிநெகும செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 06 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த கமநெகும, மகநெகும அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தற்போது முடிவுற்ற நிலையில், தேசிய ரீதியிலான திவிநெகும '10 இலட்சம் வீட்டுத் தோட்டம்' செயற்றிட்டமொன்று திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டீ.சில்வா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து 100 பயனாளிகளைத் தெரிவு செய்து வீட்டுத் தோட்டங்கள் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .