2025 மே 14, புதன்கிழமை

நாற்பது மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட அஸ்- சிறாஜ் மகா வித்தியாலயம் திறவைப்பு

Super User   / 2011 மார்ச் 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

மஹிந்த சிந்தனையின் கீழ் 1,000 பாடசாலைகள் புனரமைப்பு இசுறு திட்டத்தின் கீழ் திருகோணமலை, முள்ளிப்பொத்தானை அஸ்- சிறாஜ் மகா வித்தியாலயம் 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் வி.எஹியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், புத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.தண்டாயுதபானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இசுறு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு  திறந்துவைக்கப்படும் முதலாவது முஸ்லிம் பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .