Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் பாண்ட் வாத்தியக் குழுக்களை சிறப்பாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான பயிற்சிகள் நேற்று சனிக்கிழமை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. பத்து பாடசாலைகளைச் சேர்ந்த பாண்ட் வாத்தியக் குழுவினருக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறியானது சிரேஷ்டர் மற்றும் கனிஷ்டர் என இருக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு வலயக்கலவி பணிப்பாளர் யு.எல்.எம்.காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முதற் கட்டமாக மேற்படி பாண்ட் வாத்தியக் குழுக்கள் சிறப்பாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago
51 minute ago
57 minute ago