2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மின்சாரசபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை  பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திருத்த வேலைக்காக சென்ற  ஊழியர்கள் நால்வர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை தொடர்பில்   திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும், பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.  இதனைக் கண்டித்தே திருகோணமலை மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, நேற்றிரவு 9.30 மணியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்று காலை மின்சாரசபை ஊழியர்களை சந்தித்து கடமையை மேற்கொள்ளுமாறும் வெளியிடங்களுக்கு செல்லும் மின்சாரசபை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X