2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு மாகாண வைத்திய உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கிழக்கு மாகாண அரசினர் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், அதிகாரிகள ஊழியர்கள் ஆகியோருக்கு மேலதிக நேரக்கொடுப்பனவு வழங்குவதற்காக 45 மில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

நிதி பற்றாக்குறை காரணமாக வைத்தியர்கள், உத்தியோகத்தர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளமை தொடர்பில் கிழக்கு மாகாண சகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்தே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 120 அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்நிதி மூலம் நன்மையடைவர்.

குறித்த நிதி மாகாண சுகாதார திணைக்களத்தினூடாக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அஸீஸ் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X