2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியா கல்வி வலய அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க சிபாரிசு

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் அரச உத்தியோத்தர்கள்,  மற்றும் பணியாளர்கள் அனைவரும் உண்மையாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களுக்கு நிவாரண கொடுப் பணவு வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கணவரும் மனைவியும் நிவாரண கொடுப்பனவு பெற விண்ணப்பித்திருந்தால் இவர்களில் ஒருவருக்கு இக்கொடுப்பணவை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தால்  பாதிக்கப்படாதோரும் விண்ணப்பித்திருப்பதாகவும் இங்கு உண்மை நிலையைக் கண்டறிய கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் விசேட குழுவொன்றை நியமித்திருந்தார். இக்குழுவே இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X