2025 மே 14, புதன்கிழமை

த.தே.கூ. உள்ளூராட்சி உறுப்பினர்கள் பதவி பிரமாணம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் 12 மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு வைபவம் இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை நகரமண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா,  நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேந்திரன், செல்வன் அடைக்கலநாதன்,  சுரேஸ்  பிரேமச்சந்திரன் மற்றும் திருகோணமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X