Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரண இரண்டு நாள் விஜயமாக திருகோணமலைக்கு நேற்று சனிக்கிழமை வந்துள்ளார்.
நேற்று நண்பகல் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழையூற்று கிராமத்திற்கு சென்ற அவர், கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
அவர் அங்கு தெரிவிக்கையி;ல்,
இந்த மாவட்த்தில் அந்நிய செலவாணியைப் பெற்றுத் தரும் கனிப்பொருள் அதிகளவில் கிடைக்கின்றது. இவற்றினை நாம் பயன்படுத்துவதைக் காட்டிலும் வெளிநாட்டவர்கள் இதனை நன்கு பயன்படுத்தி வருமானத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். எமக்கு இதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடாந்தம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கின்றது.
ஆனால், வர்ணங்கள் உற்பத்தி செய்யும் மூலப்பொருளை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டியுள்ளது. எமது வளங்களை பயன்படுத்த தெரியாதவர்களாக நாங்கள இருக்கின்றோம்.
எமது நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு நாம் பல்வேறு உபாயங்கள் விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.
இதேவேளை இறக்ககண்டி நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிட்ட அமைச்சர், இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுகொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இறக்ககண்டி நலன்புரி நிலையத்திலுள்ள நாம் தொடர்ந்து அடிப்படை வசதிகளற்ற நிலையிலுள்ளோம். வெப்ப காலத்தில் தகரத்தால் வேயப்பட்ட குடில்களில் இருக்கமுடியாதுள்ளது. எமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத்தர வேண்டுமென அமைச்சரிடம் கோரினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago