2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தம்பலகாம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 14 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், அப்துல் சலாம் யாசீம்)

தம்பலகாமம் சிறாஜ் நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்;கு இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த எல்.ஜீ.நிரோஸன் மதுசங்க (வயது 17) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவராவர்.

இவர் தமது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

இவை தொடர்பாக மேலதிக விசாரணையை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X