2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை மாவட்ட குளங்களின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2ஆயிரம் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் 83 குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பவுள்ளன.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷக்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கந்தளாய் பிரதேசத்திலுள்ள தம்பலகாமம், கல்மெட்டியாகுளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 19 மில்லியன் ரூபா செலவிடப்படவள்ளது.

இந்த நிழ்வில் அமைச்சர்களான சந்திரசேன, தினேஸ் குணவர்த்தன மற்றும் பிரதி அமைச்சர்களான எம்.கே.டீ.எச்.குணவர்த்தன, புஞ்சிநிலமே, மற்றும் கிழக்கு மகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்திலுள்ள 83 குளங்களின் புனர்நிர்மாணப் பணிகள் யாவும் மாரி காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் முடிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X