2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காணிப் பிரச்சினைக்கான நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும்  காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் காணி நடமாடும் சேவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் காணிப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது காணி நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. கல்குடாத் தொகுதி மக்களின் காணிப் பிரச்சினையை தீர்க்கும் நடமாடும் சேவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி ஓட்டமாவடியிலும் வாழைச்சேனையிலும்;
நடைபெறவுள்ளது. 12ஆம் திகதி காத்தான்குடியிலும் 22ஆம் திகதி ஏறாவூரிலும்  நடைபெறவுள்ளது.

இதனையடுத்து திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும்  காணிப் பிரச்சினைக்கான நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணி பிரச்சினையுடையவர்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ளுமாறு  அமைச்சர்  சுபைர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X