Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 5 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இப்பகுதியில் இந்திய அரசாங்கம் மின்நிலையமொன்றை அமைப்பதற்கக்ன முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. எமது மக்களை வெளியேற்றி விட்டு வெளிநாடொன்றுக்கு காணி வழங்குவது துரோகத்தனமானதாகும். இதனை நாங்கள் அனைவரும் இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜயசேகர தெரிவித்தார்.
கிழக்கு மக்கள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு ஆண்டான்குளம் ஓசின் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் மக்கள் தமது இடத்தை மீளவும் வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விட முடியாத நிலையிலுள்ளனர். அவர்கள் அச்சமடைகின்றனர். அச்சம் காரணமாக அவர்களால் எதனையும் செய்ய முடியாதுள்ளது.
சம்பூர் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரிய பிரச்சினை அல்ல. இது முழு கிழக்கு மக்களுக்கும் உரிய பிரச்சினை ஆகும் என்றார்.
இதில் சங்கத்தின் தலைவர். ஜெயந்த விஜயசேகர, செயற்குழு உறுப்பினர் அருட்பிரகாசம் பிரசாத், உபாலி குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago