Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்;திரை புத்தாண்டு விழா இன்று வியாழக்கிழமை வலய கல்வி அலுவலக மைதானத்தில் நடைபெற்றது.
கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.என்.புஸ்பகுமார மற்றும் விமானப்படை கமாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்புத்தாண்டு விழா நிகழ்வில் மரதன் ஓட்டம், கிடுகு பின்னல், தலையணை சமர், கயிறு இழுத்தல், தேங்காய் திருவுதல், முட்டி உடைத்தல், சங்கீத கதிரை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்,
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago