2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் - மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

Super User   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 50,000 விதவைகளின் வாழ்வாதார முன்னேற்றுவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட குடும்பத் தாய் திட்டத்தை விரைவாக நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரிற்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரலுக்குமிடையிலான சந்திப்பொன்று மத்திய வங்கி ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இத்தீhமானம் ஏற்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவை அமைச்சு ஆகியன இணைந்து செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் பிரதியொன்றும் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸும் இச்சந்திப்பில் அமைச்சரோடு கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .