Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம், எம்.பரீட்)
தேசிய சமாதான பேரவையின் தெற்கின் மதத்தலைவர்கள் மற்றும் பிரiஐகள் குழு தலைவர்களின் கிழக்கு சுற்றுலா திட்டததின் கீழ் திருகோணமலை மாவட்ட சர்வ மத தலைவர்களின் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை சர்வோதய செயலாளர் ஏ.எல்றபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமன் செனவிரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு சேவை செய்வது பற்றி பேசப்பட்டதுடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பதிவுகளை நடமாடும் சேவைகளின் ஊடாக பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று மத தலைவர்கள், சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி சமூக பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதே இச்சுற்றுலாவின் பிரதான நோக்கமாகும்.
மொறவௌ, கிண்ணியா, புல்மோட்டை, குச்சவெளி போன்ற பகுதிகளை சேர்ந்த மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago