2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

குரங்கு பாஞ்சான் முஸ்லிம் வித்தியாலய புனரமைப்பை யுனிசெப் அதிகாரிகள் பார்வையிட்டனர்

Kogilavani   / 2011 மே 05 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த 20 வருடகாலமாக கைவிடப்பட்டிருந்த கிண்ணியா குரங்குபாஞ்சான் பரகத்நகர் முஸ்லிம் விதியாலயத்தின் புனர் நிர்மாணப்பணிகளை யுனிசெப் அதிகாரிகள் குழு நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

யுனிசெவ்  வழங்கிய 20 இலட்சம் ரூபா நிதி உதவியின் மூலம் இப்பாடசாலை மீளக்கட்டியெழுப்ப்படடு வருகின்றது.

இதனை கூடிய விரைவில் மீள திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த இக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்ப வாரத்தில் குரங்குபாஞ்சான் பிரதேச மக்களை முழுமையாக அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி பாடசாலையையும் மீள ஆரம்பிக்க முடியும் என பரகத் நகர் வித்தியாலய அதிபர் மௌலவி எம்.வை.ஹதியத்துல்லா தெரிவித்தார்.

இக் குழுவில் யுனிசெவ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அதிகாரி எம்.அஸாதுர் ரஹ்மான் செயற்றிட்ட அதிகாரிகளான எ.கே.சறூக், கே.கௌரீஸ்வரன் மற்றும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக இணைப்பாளர் எம்.எப்.அமீன்வாரி ஆகியோர் அடங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X