2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 மே 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்திலிருந்து காணோமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமது உறவுகளை தேடித்தருமாற கோரி மறியல் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடிய இவர்கள் பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் காரணமாக கடற்படைத்தள வீதியில் போக்குவரத்து நெருக்கடிகளும் இடையுறுகளும் ஏற்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களின் நாம் இலங்கையர் என்ற அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X