2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருமலையில் காசநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் காசநோய் அதிகளவில் பரவி வருவதாக மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் சுரேஸ் குமார் தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட 2011ஆம் ஆண்டு காசநோயாளர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. கிண்ணியா, மூதுர், கந்தளாய் போன்ற பகுதிகளிலேயே அதிகளவில் காசநோய் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் வைத்து பராமரிப்பதற்கு திருகோணமலை மாவட்டத்தில் காசநோய்க்கான வாட் தொகுதி; இல்லையென்றும் டாக்டர் தெரிவித்தார்.

திருகோணமலை நகரத்துக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வீதி வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். இதனால், பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.  தொடர்ச்சியாக இருமல், இரவு நேரத்தில் காய்ச்சல், உடல் மெலிவு, சளித்தொல்லை ஆகிய அறிகுறிகள்  காணப்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் காசநோய் கட்டுப்பாட்டுக்கான வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X