2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஐந்து வருடங்களின் பின் சம்பூர் பிரதேச காளி கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2011 மே 22 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ, எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள சம்பூர் பிரதேசத்திலுள்ள பத்திரகாளி கோவிலில் இன்றையதினம் நடைபெறுகின்ற பொங்கல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரகாளி  கோவில் மற்றும் பிள்ளையார் கோவிலில் கடந்த ஐந்து வருடகாலமாக பூஜை வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

பத்திரகாளி கோவில் பொங்கல் உற்சவத்தில் கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் கலந்துகொள்வதற்கான அனுமதி நேற்று பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

கிளிவெட்டி நலன்புரி நிலைய மக்கள் நேற்று சனிக்கிழமை காளி கோவிலுக்கு சென்று சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

பத்திரகாளி கோவில் பொங்கல் உற்சவத்திற்கு செல்வதற்காக கிளிவெட்டி நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த மக்களுக்கு இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X