2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மீன்வாடியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மே 27 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புடவைக்கட்டு பகுதியிலுள்ள மீன்வாடியிலிருந்து ஆணொருவரின்  சடலம் மீட்கப்பட்டதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், குடாவெவ பகுதியைச் சேர்ந்த சூரியமுதலிகே சமன்த நிரஞ்சன் (வயது 39) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
தனது நண்பருடன் இடம்பெற்ற  வாக்குவாதத்தின் பின் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மீன் வெட்டும் கத்தியால் அவரது தலைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாக மனைவி மேரிமாலனி தெரிவித்தார்.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின்   பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஐர்படுத்தவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X