2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியில் பாலர் பாடசாலை கட்டிடம் நிர்மாணம்

Super User   / 2011 மே 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியில் கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்புயினால் நிர்மாணிக்கப்பட்ட தம்பலாகம நூருல் ஜன்னாஹ் பாலர் பாடசாலை கட்டிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஸ்லிம் எய்டின் இலங்கை பணிப்பாளர் பைசர் கான், தம்பலாகமப் பிரதேச செயலாளர் தென்னக்கோன், தம்பலாகமப் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

தம்பலாகம நூருல் ஜன்னாஹ் பாலர் பாடசாலை கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி மர நிழலில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X