2025 ஜூலை 02, புதன்கிழமை

பாம்புக்கடிக்கு இலக்காகி இரண்டரை வயது குழந்தை பலி

Kogilavani   / 2011 ஜூன் 06 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை குச்சவெளி  ஜாயா நகர் பகுதியில்  இரண்டு வயது குழந்தையொன்று பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் நுஸ்ரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. இக் குழந்தை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

மேற்படி குழந்தையை வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

தற்போது குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குச்சவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .