2025 ஜூலை 02, புதன்கிழமை

மனித உரிமைகள் பாதுகாவளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக்கிளையினால் மனித உரிமைகள் பாதுகாவளர்களுக்கான பரிசளிப்பு  நிகழ்வு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி திருமதி வீ.மதியாபரணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் டாக்டர் எஸ்.அமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் என்.மணிவண்ணன், பொது வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி ஞானகுணாளன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது 32 மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய திருகோணமலை மனித உரிமைகள் பொறுப்பதிகாரி வி.மதியாபரணம்  '2005ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 600க்கும் மேற்பட்வர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக'  குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .