2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் அரச, தனியார் பஸ் தரிப்பிடம் இடமாற்றம்

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில் அரச மற்றும் தனியார் பஸ் தரிப்பிடம் நேற்று வியாழக்கிழமை  முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கிண்ணியா குட்டிக்கராச் பகுதியில் இயங்கி வந்த பஸ் தரிப்பிடம் தற்போது  சூரங்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நேற்று முன்தினம் அரச, தனியார் பஸ் ஓட்டுனர்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினையால் நால்வர் காயப்பட்டு கி;ண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தன். இப்பிரச்சிணைக்காக தனியார் பஸ் ஓட்டுனர்கள் நேற்று பணி
பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை கண்டித்து கிண்ணியா பொலிஸார் இரு தரப்பினர்களுக்குமிடையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இப்பிரச்சிணைக்கு தீர்வாக பஸ் தரிப்பிடத்தை இடமாற்றம் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X