Menaka Mookandi / 2011 ஜூன் 28 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர், பிரதான லிகிதர் மற்றும் கிராம சேவகர் என மூவர் நேற்று திங்கட்கிழமை முதல் உடன் அலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் நிதி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே மேற்படி அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கையின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவர்களை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கான உத்தரவினை திருமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இவர்கள் தொடர்பான மீள் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தம்பலகாமம் பிரதேச செயலாளர் லக்ஷ்மேந்திர தமயன் குமாரவுக்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
35 minute ago
2 hours ago
koneswaransaro Wednesday, 29 June 2011 03:42 AM
சரியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
2 hours ago