2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்

Super User   / 2011 ஜூன் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா வலய  கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் இனந்தெரியாத குழுவொன்றினால் இன்று செவ்வாய்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் திருகோணமலையில் இடம்பெற்ற கல்வி செயலமர்வில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X