2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவா,எப்.முபாரக், எம்.பரீட்)

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கிண்ணியா வலயக் கல்வி பிரிவிற்குட்பட்ட  58 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்யுமாறு கோரி இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து  வருகின்றனர். 25,000 மாணவர்களும் 1100 ஆசிரியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றிரவு பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்  இன்று திருகோணமலை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் திருகோணமலையில் நடைபெற்ற கல்விச் செயலமர்வில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாக்கப்பட்டார்.  தாக்குதலுக்குள்ளான இவர் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X