2025 மே 13, செவ்வாய்க்கிழமை

டென்மார்க் றொட்றிக் கிளப் குழுவினர் திருமலை விஜயம்

Kogilavani   / 2011 ஜூன் 29 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்,எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா கல்வி வலயத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட தி/அல்-றவ்ளா வித்தியாலத்தை நிர்மாணித்துக் கொடுத்த டென்மார்க் றொட்றிக் கிளப் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை இவ்வித்தியாலயத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின்போது, டென்மார்க் றொட்றிக் கிளப் பணியாளர்களான நில்ஸ், அன்டர்கன், ஜோசன் ஆகியோருடன் திருகோணமலை மாவட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விஜயத்தின்போது, கிரிக்கெட் உபகரணங்களை பாடசாலையின் அதிபருக்கு கையளித்ததுடன் இப்பாடசாலைக்கு தேவையான விடங்கள் குறித்தும் வரிய மாணவர்களின் விபரங்களையும் கேட்டறிந்துக் கொண்டனர்.

இந்நிறுவனம் இப்பாடசாலைக்கென 2 மூன்று மாடிக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மாணவர்களுக்கான நிதியுதவி என பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை,  டென்மார்க் ரொட்டறி கழகக் குழுவினர் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை மாலை விஜயம் செய்தனர்.

வைத்தியசாலையின் முகாமைத்துவம் தொடர்பாக பார்வையிட்டதுடன், வைத்தியசாலையில் காணப்படும்; குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் தேவைகளுக்கு தாங்கள் உதவுவதாக  அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளனிடம் டென்மார்க் ரொட்டறி கழகக் குழுவினர் உறுதியளித்தனர்.

திருகோணமலை ரொட்டறி கழகத்திற்கு விஜயம் செய்த டென்மார்க் ரொட்டறி கழக குழுவினர், திருகோணமலை ரொட்டறி கழகத்தின் செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்து கொண்டனர்.

சுனாமி தாக்கத்தின் பின்னர் திருகோணமலையில் பல்வேறு  நிவாரண வேலைகளை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். படப்பிடிப்பு:-(எஸ்.எஸ்.குமார்,எம்.பரீட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X