2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

Freelancer   / 2025 மே 13 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது, நேற்று திங்கள் கிழமை மதியம் நாட்டிற்கு வந்த பிறகு சுங்க வளாகத்தின் வழியாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, அவரது பொருள்களுக்குள் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த எடை 46 கிலோகிராம் என்றும், அதன் மதிப்பு 460 மில்லியன் ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரையும் போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X