Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மே 12 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இந்த விபத்து பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago