2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாசிப்பறை செயற்றிட்டத்தின் கீழ் அதிபர், ஆசிரியர்களுக்கான வலையமைப்புக் கூட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 29 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் உள்ள வாசிப்பறை செயற்றிட் திட்டத்தின் கிழ் அதிபர், ஆசிரியர்களுக்கான வலையமைப்புக் கூட்டம்  இன்று புதன்கிழமை காலை வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா விஷன் அனுசரணையின் கீழ்  ரூம் டூ ரீட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இணைப்பாளர் தா.ஸவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இருபது அதி கஷ்ட பிரதேச பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு வாசிப்பறை முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மூதூர் வலையக் கல்விப் பணிப்பாளரும் ஏ.வித்தியானந்த மூர்த்தி, மூதூர் நூலக இணைப்பளர்   எம்.ஆரிப், முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பளர் வி.எம்.லாபீர் மற்றும் கிண்ணியா விஷன் ஊக்குவிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X